சட்ட விரோதமாக குடியேறும் நபர்களை உடனடியாக வெளியேற்ற அமெரிக்கா முடிவு!

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 03:36 pm
trump-calls-for-illegal-immigrants-to-be-sent-home-immediately

அமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக குடியேறும் நபர்களை அவர்களது நாட்டுக்கே உடனடியாக திருப்பி அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அமெரிக்க நாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களுக்கு அமெரிக்க அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நகர மக்கள் அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். இதற்கு  எதிராக, பெற்றோர்களையும், குழந்தைகளையும் பிரித்து வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ஆனால் இதற்கு டிரம்ப்பின் மனைவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவிக்க இந்த உத்தரவை டிரம்ப் வாபஸ் பெற்றார். இதையடுத்து பெற்றோர்களையும், குழந்தைகளையும் ஒரே சிறையில் அடைத்து வைக்க உத்தரவிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப், "அமெரிக்காவில் குடியுரிமை பெற பலர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாக மக்களை  அமெரிக்காவிற்கு குடியேற அனுமதிக்க முடியாது. அமெரிக்கா பலமான பாதுகாப்பான எல்லையை கொண்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. எனவே மக்கள் இதைப்பற்றி பேசுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறும் மக்கள் உடனடியாக அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர்" என தகவல் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close