இந்தியா வரும் அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி!

  Padmapriya   | Last Modified : 26 Jun, 2018 11:00 pm
nikki-haley-s-visit-to-india

இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை வளர்க்கும் நோக்கத்தோடு ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இந்தியா 
வர இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே நிக்கி ஹாலேவின் வருகை இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர்களுக்குப் பிறந்தவர் நிக்கி ஹேலி. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக இருந்தவர் நிக்கி ஹேலி. இவர் இந்திய வம்சாவளி பஞ்சாபியர்களுக்கு பிறந்தவர் ஆவார். முன்னதாக, கடந்த 2014-ல் கரோலினா ஆளுநராக இருந்தபோது, நிக்கி இந்தியா வந்துள்ளார். 

ஐ. நாவுக்கான அமெரிக்க தூதரானப் பிறகு நிக்கி ஹேலி முதல் முறையாக இந்தியா வருகிறார்.  நிக்கி ஹேலி ஜூன் 26 -28 ஆகிய தேதிகளில் பயணத்தில் இந்தியாவில் முக்கிய அரசு அதிகாரிகள், என்ஜிஓக்களை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறார் என்று தெரிவிட்டுள்ளது.

நிக்கி ஹேலிவின் இந்தச் சந்திப்பு இந்தியா - அமெரிக்க உறவை கூடுதலாக பலமாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இருப்பினும் இவரது வருகையின் முக்கிய நோக்கம் தெரியவில்லை. 

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த வாரம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது கவனிக்கத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close