அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பத்திரிக்கையாளர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 05:37 pm
capital-gazette-shooting-five-killed-in-targeted-attack-on-maryland-newsroom

அமெரிக்காவில் பிரபல நாளிதழ் நிறுவனம் ஒன்றில் நுழைந்து நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவதில், 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

அமெரிக்கா மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னபோலிஸ் பகுதியில் 'கேப்பிட்டல் கேசட்' எனும் தனியார் செய்தி நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தயுள்ளார். இதில் 5 பத்திரிக்கையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்டமாக வெளியான தகவலின்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை பற்றி, அவர்களது செய்தித்தாளில் அவதூறாக செய்தி வந்ததாகவும், இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அந்த நபரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதனால் அவர் கோபமடைந்து இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close