அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!- நிறவெறி படுகொலையா என விசாரணை

  Padmapriya   | Last Modified : 08 Jul, 2018 09:36 am
indian-student-killed-in-shooting-inside-us-restaurant

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவில் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்தவர் சரத் கோபு (26). இவர் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சரத், அந்த பகுதியில் உணவகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்ட  சத்தம் கேட்டது. இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தபோது, ரத்த வெள்ளத்தில் சரத் கிடந்ததைப் பார்த்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக மிசவுரி மாகாண போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சரத்தை சுட்டுக் கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேப் போல, கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற மாணவரை கான்சாஸ் நகரில் நிறவெறிக் காரணமாக அமெரிக்கர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரமும், நிறவெறி வெறுப்புணர்வும் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close