உலகிலேயே அசிங்கமான நாயாக பட்டம் பெற்ற அமெரிக்க நாய் மரணம்

  Padmapriya   | Last Modified : 12 Jul, 2018 08:41 pm
zsa-zsa-winner-of-the-world-s-ugliest-dog-contest-has-died

உலகிலேயே மிகவும் அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த சீசா சீசா என்ற நாய் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் வாழ்ந்து வரும் அனோகோ என்பவருக்கு சொந்தமான நாய் சீசா சீசா.  இது இங்கிலீஷ் புல் டாக் வகையை சேர்ந்தது ஆகும். பார்க்கவே பயங்கரமாகவும், பல செண்டிமீட்டர் அளவிலான நாக்கை கொண்டதற்காக்கவும் இந்த நாய் சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்டு தோறும் நடக்கும் அசிங்கமான நாய்களுக்கான போட்டியில் உலகிலேயே அசிங்கமான நாய் என்ற பட்டத்தை வென்றது. 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீசா சீசா நாய் இறந்து விட்டதாகவும். தூங்கும் போதே அது மரணமடைந்து விட்டதாகவும் உரிமையாளர் அனோகோ தெரிவித்துள்ளார். மரணமடைந்த சீசா சீசாவுக்கு 9 வயது தான் ஆகிறது. உலகிலேயே அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அதனை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார் உரிமையாளர் அனோகா. ஆனால் அதற்கு இப்படி நடந்துவிட்டதாக அனோகா வேதனைத் தெரிவித்துள்ளார். 

நீளமான நாக்கு கொண்டிருந்ததால் வாயிக்குள் அதன் நாக்கை வைக்க முடியாமல் அதன் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என்று சீசா சீசா குறித்து அனோகோ விவரிக்கிறார். சீசா சீசாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடையவை: உலகின் அசிங்கமான நாய்க்கான போட்டி: பட்டம் வென்ற புல்டாக் நாய் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close