'போர்ப்ஸ்' பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்!! 

  சுஜாதா   | Last Modified : 13 Jul, 2018 07:38 am

two-indian-origin-women-on-forbes-list-of-america-s-richest

அமெரிக்காவின் 'போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும் பணக்காரர்கள் பட்டியல் உலக புகழ் பெற்றது. இது தற்போது  அமெரிக்காவில் சுயமாக தொழில் தொடங்கி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி என்ற  2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஜெயஸ்ரீ உல்லால்(57), அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இவருடைய நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10,880 கோடி) வருமானம் ஈட்டி உள்ளது. ஜெயஸ்ரீ உல்லால் லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நீரஜா சேத்தி(63), இவர் கணவர் பரத் தேசாயுடன் இணைந்து  சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை  இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நீரஜா சேத்தி இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். கடந்த ஆண்டு இவருடைய நிறுவனம் 924 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,283 கோடி) வருமானம் ஈட்டி உள்ளது.

'போர்ப்ஸ்’ பட்டியலில் ஜெயஸ்ரீ உல்லாலுக்கு 18–வது இடமும், நீரஜா சேத்திக்கு 21–வது இடமும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close