எனக்கு 40 சதவீத சம்பளம் போதும்: மெக்சிகோ அதிபராகும் லோபஸ் 

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 06:20 pm
mexican-president-elect-lopez-obrador-slashes-his-salary-by-60

மெக்சிகோ அதிபராக பதவியேற்க உள்ள லோபஸ் ஆப்ரதோர் தனது பதவிக்கு 40 சதவீத சம்பளம் தந்தால் போதும் என்று கூறியுள்ளார். 

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான ஐஆர்பி கட்சி படுதோல்வியடைந்தது. 

சுமார் ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்ட இரு பெரும் கட்சிகளை தோற்கடித்து வரலாற்று சாதனையை படைத்த லோபஸ் ஆப்ரதோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. லோபஸ் ஆப்ரதோரின் தேர்தல் பிரசாரத்தில் பல சிக்கன நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தனது ஆட்சியில்  ஊழல், வறுமை, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒழிக்கவே முக்கியத்துவம் என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார் என்பது குறிபிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விரைவில் அதிபராக பதவியேற்க உள்ள லோபஸ் , இப்போதே சில சிக்கன நடவடிக்கை அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் மெக்சிகோ அதிபருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தான் அதிபராக பதவியேற்றதும் அதிபருக்கான ஊதியம் ரூ.4 லட்சமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதாவது தனக்கு 40 சதவீத ஊதியம் போதும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close