மனித உரிமை ஆணையம் ஐ.நா.வின் மிகப் பெரிய தோல்வி: அமெரிக்கா 

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 09:58 pm
nikki-haley-calls-human-rights-council-un-s-greatest-failure

மனித உரிமைகள் ஆணையம் என்பது ஐ.நா-வின் மிகப் பெரிய தோல்வி என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார்  

ஐ.நா-வின் மனித உரிமைகள் கழக்கத்தில் இருந்து கடந்த மாதம் அமெரிக்கா விலகியதாக அதிரடியாக அறிவித்தது. இந்த நிலையில் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் போலியான பாசாங்குதனங்களை அதன் மலிவான செயற்பாடுகளையும் அமெரிக்கா கண்டிக்கிறது. மனித உரிமைகள் ஆணையம் மனசாட்சியோடு இல்லை. அது அரசியலின் இருப்பிடமாகவே உள்ளது. இஸ்ரேல், சீனா, வெனின்சுலா, கியூபா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் நடக்கும் பல அத்துமீறல்களை மனித உரிமைகள் கழகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. 

மனித உரிமைகள் ஆணையம் தான் உலகின் பெரும்பாலான மனிதநேயமற்ற செயல்களை கண்டிப்பதற்கு பதிலாக பாதுகாத்து வருகிறது. அமெரிக்கா அதிலிருந்து விலகியதால் அதனை எதிர்ப்பதை ஒரு நாளும் தவிர்த்துக்கொள்ளாது என தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close