அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை முட்டாளாக்கிய கூகுள்

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 01:11 pm
search-for-idiot-and-trump-s-face-appears-on-google

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்து வரும் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை தொடர்ந்து, Idiot என பதிவிட்டு கூகுளில் தேடினால், ட்ரம்ப்பின் பெயர் வருமாறு சில நெட்டிசன்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தனது வாலிப காலத்தில் இருந்த ஊடகங்களில் இடம்பிடிக்க பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் ட்ரம்ப். யாரும் எதிர்பார்க்காதவாறு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, பல விஷயங்கள் மூலம் உலக கவனத்தை தினம் தினம், தன் வசம் ட்ரம்ப் வைத்துள்ளார். அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் சண்டை பிடிப்பதும், வடகொரியா, ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரி நாடுகளிடம் நட்பு பாராட்டுவதும் என ஏறுக்கு மாறான விஷயங்களை ட்ரம்ப் செய்து வருகிறார்.

அமெரிக்க உளவுத்துறை, ரஷ்ய ஹேக்கர்கள் அமெரிக்க தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்தும் கூட, ரஷ்யா மற்றும் அதன் அதிபர் புடினிடம் அதுகுறித்து எந்த கண்டனமும் வைக்க மறுத்துவிட்டார் ட்ரம்ப். "தாங்கள் அதுபோல எதுவும் செய்யவில்லை என புடின் சொல்வதை நான் நம்புகிறேன்" என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார். பின்னர், தான் பேசியதை ஊடகங்கள் தவறாக திரித்து விட்டனர் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், கூகுளில், idiot (முட்டாள்) என தேடினால், ட்ரம்ப்பின் பெயர் வருமாறு, பல நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தனர். பல ஆயிரம் பேர் சேர்ந்து கடந்த சில தினங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தற்போது idiot என கூகுளில் தேடினால் ட்ரம்ப்பின் புகைப்படங்கள் வரத் துவங்கியுள்ளன.

கடந்த சில மாதங்களில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் இதேபோல கூகுள் பிரச்னைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close