'புடின் பரிசளித்த கால்பந்தில் ஒட்டுக் கேட்கும் கருவி'

  Padmapriya   | Last Modified : 22 Jul, 2018 11:35 am
could-putin-have-bugged-the-football-he-gave-to-trump-by-stitching-undetectable-chip-into-the-fabric

பின்லாந்து சந்திப்பில் ட்ரம்ப்புக்கு ரஷ்ய அதிபர் புடின் பரிசாக அளித்த கால்பந்தில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருக்கலாம் என குடியரசு கட்சி செனட்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் கடந்த 12-ம் தேதி பின்லாந்து நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நிறைவு செய்த ரஷ்யாவுக்கு ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்தார். அப்போது 2026-ல் உலகக் கோப்பை கால்பந்து  போட்டியை நடத்த இருக்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துகள் என்று கூறி, ட்ரம்புக்கு கால்பந்து ஒன்றை புடின் பரிசாக அளித்தார். 

அமெரிக்கா வந்தடைந்த பின் அந்த கால்பந்தை, தனது 12 வயது மகன் பாரானுக்கு அளிக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 

அமெரிக்க அதிபருக்கு வரும் அனைத்துப் பரிசுப்பொருட்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது போல, அந்த கால்பந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரகாம், ''ஒருவேளை நான் அந்த கால்பந்தை பெற்றிருந்தால், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் உள்ளதா என்பதை சோதனைக்கு உள்படுத்தி இருப்பேன். மேலும், அதனை ஒருபோதும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்து இருக்க மாட்டேன்'' என ட்வீட் செய்துள்ளார். 

மேலும் இவர், ட்ரம்ப் - புடின் சந்திப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்தே விமர்சித்து வந்துள்ளார். 

தொடர்புடையவை: பனிப்போர் முடிந்தது: ட்ரம்ப் - புடின் கைக்குலுக்கலும் கால்பந்து பரிசும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close