11 வயது இளைய அமெரிக்க பாடகருடன் திருமணம்: விமர்சனத்துக்கு ஆளான பிரியங்கா!

  Padmapriya   | Last Modified : 28 Jul, 2018 03:57 pm
priyanka-chopra-nick-jonas-engaged

பாப் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளான்று நிச்சயம் செய்துகொண்டுள்ளார். தன்னை விட 11 வயது இளையவரான ஜோனாஸுடன் பிரியங்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க தொலைக்காட்சிக்காக க்வாடிக்கோ என்ற த்ரில்லர் தொடரில் நடித்து வருகிறார். இதில் சிஐஏ அதிகாரியாக நடிக்கும் அவர் அதற்காக அமெரிக்காவிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸுடன் தனது பிறந்தநாளான நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விரைவில் இவர்களது திருமணமும் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த சில மாதங்களாக, நிக் ஜோன்ஸுடன் பிரியங்கா நியூயார்க் வீதிகளில் சுற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நிக் ஜோனாஸ், பிரியங்காவை விட 11 வயது இளையவராவார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் திருமணம் குறித்து சமீபத்தில் தான் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. 

முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸுடன் கலந்து கொண்டார். அப்போது தனது குடும்பத்தினரிடம் நிக் குறித்து அறிமுகம் செய்து சம்மதம் பெற்றதாக தெரிகிறது. 

பாரத் படத்திலிருந்து விலகல்..

இந்த நிலையில் அமெரிக்க சீரியலில் பிஸியாக இருக்கும் பிரியங்கா, சல்மான் கானுடன் 'பாரத்' படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விலகுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.  மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் பிரியங்காவை விமர்சித்துள்ளது. தனது நிச்சயதார்த்தம் நடப்பதினால் படத்திலிருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன்னர் தான் பிரியங்கா கூறியதாகவும் பணியில் அவர் அலட்சியமாக நடந்துகொண்டுவிட்டதாகவும் ரீல் லைப் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close