15 வயதிலேயே பட்டதாரி... அமெரிக்காவை கலக்கிய இந்திய சிறுவன்!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 05:54 pm
indian-origin-student-graduates-at-age-15-in-us

இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க சிறுவன் தனிஷ்க் ஆப்ரஹாம், தனது 15வது வயதிலேயே, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

அதிபுத்திசாலியான தனிஷ்க், சிறு வயதிலேயே மற்ற மாணவர்களை விட வித்தியாசமானவர் என அவரது பெற்றோருக்கு தெரிந்துள்ளது. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட அவர், பள்ளிப்படிப்பை சில வருடங்கள் முன்னதாகவே முடித்துவிட்டார். அவரது திறமையை கண்ட கலிபோர்னியா பல்கலைக்கழகம், அவர் இளங்கலை பட்டத்திற்கு பயில அனுமதியளித்தது. 15 வயதான நிலையில், அவர் இளங்கலை பட்டத்தையும் தற்போது பெற்றுவிட்டார். அதுவும், சுமா-கம்- லாடே என அழைக்கப்படும் உச்ச கட்ட மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "நிச்சயம் என்னுடைய சாதனைகளை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது" என்றார். "அவனின் கல்வி ஆர்வத்திற்கு அளவே இல்லை" என அவரது பெற்றோர் தாஜி மற்றும் பிஜு ஆப்ரஹாம் கூறினர். அடுத்ததாக, அதே பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் துறையில் பி.எச்.டி படிக்க அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. பி.எச்.டி முடித்துவிட்டு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். 

ஏற்கனவே, தீக்காயங்களுடன் அனுமதிக்கப்படுபவர்களின் உடலை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கணக்கெடுக்கும் ஒரு கருவியை அவர் வடிவமைத்துள்ளாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close