இந்தியாவுக்கு எஸ்.டி.ஏ-1 நாடு என்ற அங்கீகாரம் வழங்கியது அமெரிக்கா

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 09:10 pm
us-grants-of-sta-1-status-to-india-eases-export-controls-for-high-tech-product-sales

பாதுகாப்புத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் எஸ்.டி.ஏ-1 அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது 

அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை எளிதில் கொள்முதல் செய்க்கூடிய சிறப்பு அங்கீகாரம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்.டி.ஏ-1 எனப்படும் அமெரிக்க தயாரிப்புகளை வாங்க வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

இதன் மூலம், அமெரிக்காவின் மேம்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அந்நாட்டிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்ய வழிவகை செய்வதாக அமையும். இந்த அங்கீகாரம் இந்திய பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

மேலும், எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close