மெக்சிகோ விமானம் நொறுங்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பயணிகள்!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 01:21 pm
mexico-plane-crashes-with-103-people-aboard-but-all-survived

மெக்சிகோவில் 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பேருடன் புறப்பட்ட விமானம் திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். 

மெக்சிகோவின் வடக்கு மாகாணமான டுராங்கோ விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 104 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. 

தீப்பிடித்த விமானம் வயலில் விழுந்தது. இருப்பினும் விமானத்தில் பயணித்த 104 பேரும் உயிர் தப்பினர். சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. 2 பேர் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை மீட்டனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

டுராங்கோ மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் கூறுகையில், ''விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழவில்லை'' என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close