3டி பிரிண்டிங்கில் துப்பாக்கி...தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்

  shriram   | Last Modified : 01 Aug, 2018 12:28 pm
us-court-blocks-3d-gun-printing-software

அமெரிக்காவில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் துப்பாக்கி தயாரிக்க உதவும் சாப்ட்வேர் மீது சியாட்டில் நகர நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே துப்பாக்கி வன்முறைகளுக்கு அமெரிக்காவில் அளவில்லை. அரசியல் சாசனப்படி துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உள்ளதால், துப்பாக்கி கலாச்சாரம் அந்நாட்டில் மேலோங்கி உள்ளது. இதனால், துப்பாக்கி வன்முறைகளும், சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மட்டும் சுமார் 7000 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அந்நாட்டில் இறந்துள்ளனர். துப்பாக்கிகளை கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தாலும், ஆளும் குடியரசு கட்சி அதற்கு அனுமதியளிப்பதில்லை. 

இந்நிலையில், 3டி பிரிண்டிங் மூலம் பொதுமக்களே துப்பாக்கி தயாரித்துக் கொள்ளும் தொழில்நுட்பத்தை, டிபென்ஸ் டிஸ்ட்ரிபியூட்டட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3டி பிரிண்டிங் மூலம் பிளாஸ்டிக்கில் AR-15 எனப்படும் சிறிய ரக மெஷின் கன் துப்பாக்கியை கூட இதை வைத்து செய்ய முடியுமாம். இதற்கு அந்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஏற்கனவே, அளவில்லாமல் பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க முடியாமல், அந்நாட்டு அரசு திணறி வருகிறது. குற்றவாளிகளிடம் துப்பாக்கிகள் செல்வதை தடுக்க முடியாத நிலையில், தற்போது அவர்களே துப்பாக்கி செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது போல இந்த சாப்ட்வேர் அமைந்துள்ளது. 

இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த சாப்ட்வேரை பொதுமக்கள் மத்தியில் வெளியிட தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக போராடும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு கூடங்களில், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் உள்ளது. இது போன்ற சாப்ட்வேர்களை வைத்து, எந்த தடயமும் இல்லாமல் பெரிய துப்பாக்கிகளை தயாரிக்க முடியும். அது நிச்சயம் நாட்டிற்கு அல்ல. இந்த தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close