மலை முகட்டில் புல் அப்ஸ்: அந்தரத்தில் தொங்கிய பிரேசில் இளைஞர் 

  Padmapriya   | Last Modified : 01 Aug, 2018 08:55 pm
astonishing-footage-shows-daredevil-being-pulled-to-safety-after-he-gets-into-trouble-dangling-from-lethal-ledge-in-brazil

பிரேசிலில் பெட்ரா டெ கேவியா என்ற மலை முகட்டில் புல் அப்ஸ் எடுத்து சாகசம் செய்யப் போய்  அந்தரத்தில் தொங்கிய இளைஞரை அவரது நண்பர்கள் போராடி மீட்டனர். சமூக வலைதளங்களில் வெளியாகிய இந்த சம்பவத்தின் படங்கள் திடுக்கிட செய்வதாய் இருக்கின்றன. 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பலநூறு மீட்டர் உயரம் கொண்ட பெட்ரா டெ கேவியா என்ற மலை முகடு உள்ளது. ஹாலிவு சண்டைக் காட்சிகளும் காதல் காட்சிகள் பலவற்றிலும் இதனை கண்டிருக்கலாம். மிகவும் பிரபலமான இந்தப் பகுதியில் இளைஞர்கள் சாகசம் செய்து செல்ஃபி  எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

அதுபோல, இதன் உச்சியில் உள்ள பாறையில் தொங்கியவாறு செல்ஃபி எடுப்பது, புல் அப்ஸ் எடுப்பது போன்ற சாகசங்களை உயிரைப் பணயம் வைத்து அந்நாட்டு இளைஞர்கள் செய்கின்றனர். அந்த வகையில் 3 இளைஞர்கள் அந்த உச்சி முகட்டில் ஒவ்வொருவராக புல் அப்ஸ் எடுக்க அதனை மற்ற இருவர் வீடியோ எடுக்க முயர்சித்துள்ளனர்.  இவர்கள் மூவருமே மலையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 

அப்போது புல் அப்ஸ் எடுக்கையில் கைத் தவிரிய இளைஞர், முகட்டில் தொங்கி அங்கிருந்து விழும் அளவுக்கு சென்றுள்ளார். பின்னர் உடன் இருந்த நண்பர்கள் இளைஞரை தங்களது உயிரைக் கொடுத்து மீட்டு மேலே இழுத்துக் கொண்டனர்.  வீர சாகசம் செய்யப் போன இடத்தில் உயிர் போக இருந்த இளைஞர் காப்பாற்றப்பட்டது குறித்து அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். 

வித்யாசமான செய்கைகளை செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் முனைப்போடு பெட்ரா பாறைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இதுவரை அங்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த இடத்தில் முன்னெச்சரிக்கையாக வேலி அமைக்கும் முடிவை பிரேசில் அரசு எடுத்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close