வெனிசுலா அதிபரை கொல்ல சதி செய்ததாக 6 பேர் கைது! - வெடித்தது சிலிண்டர் என ஆய்வு சொல்கிறது

  Padmapriya   | Last Modified : 06 Aug, 2018 03:19 pm
venezuela-makes-six-arrests-in-alleged-maduro-assassination-attempt

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சியில் அவரைக் கொலை செய்ய முயன்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை மாலை ராணுவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். வீரர்கள் அணிவகுப்பை முடித்து வரிசையில் நின்றி காத்திருந்தனர். அப்போது நிக்கோலஸ் பேசத் தொடர்ங்கிய சிறிது நேரத்தில் அங்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட சிறிய ரக 2 விமானங்கள் வெடித்து சிதறின. அக்கிருந்த மக்கள் ஆங்காங்கே பீதியில் ஓடினர். அதிர்ஷ்டவசமாக இதில் அதிபர் தப்பித்தார். 

இது குறித்து அந்நாட்டு நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் கூறுகையில், ''இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பல உணவகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதிபரை கொலை செய்யும் இந்த சதி முயற்சி 2 தானியங்கி குட்டி விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது. ஆனால், சரியாக சிக்னல் கிடைக்கததால் அதிபர் இந்தத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். 

இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விசாரணை தொடர்ந்து வருகிறது. பலர் கைதாவார்கள் என தெரிகிறது" என்றார்.

தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தம்மை கொலை செய்ய முயன்ற பின்னணியில் கொலம்பியா அதிபர் ஜூவான் மேனல் சான்டோஸ் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அமெரிக்க சதியும் இருப்பதாக கூறினார். ஆனால் அதிபர் மதுரோவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கொலம்பிய அரசு மறுத்துள்ளது. 

இதற்கிடையில் தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்த வெனிசுலா அதிகாரிகள், அதிபர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடித்தது ட்ரோன் குண்டுகள் இல்லை எனவும், அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட சிறிய தீ விபத்தில் சிலிண்டர்கள் தூக்கி வீசப்பட்டு, அவை வெடித்த போது சிதறிய துண்டுகள் எனவும் தெரிவித்துள்ளனர். 

நிகழ்ச்சியை படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டரை ட்ரோன் என தவறாக நினைத்து விட்டதாகவும் கூறி உள்ளனர். அதிபரின் குற்றச்சாட்டுக்கு எதிராக உள்நாட்டு அதிகாரிகளின் அறிக்கை உள்ளதால் அங்கு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close