அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்!

  Padmapriya   | Last Modified : 13 Aug, 2018 12:44 pm
6-4-earthquake-hits-alaska-no-reports-of-injuries-or-damage

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான அலாஸ்காவின் வடக்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. அங்குள்ள கக்டோவிக் நகரில் இருந்து, 52 மைல்கள் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.  நிலநடுக்கத்துக்கு பின் பலமுறை சிறிய அளவு அதிர்வுகள் சுற்றுவட்டார பகுதிகளை தாக்கியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.  இருப்பினும் சேத மதிப்புகள் உடனடியாக தெரியவில்லை

கடந்த 1995ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைஅடுத்து தற்போது தான் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தற்போது பதிவாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close