இறந்த குட்டியை 2 வாரம் சுமந்த தாய் திமிங்கலம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

  Padmapriya   | Last Modified : 13 Aug, 2018 01:13 pm
killer-whale-continues-carrying-dead-calf-for-unprecedented-length-of-mourning

இறந்த தன் குட்டியை 17 நாட்களாக 1600 கிலோ மீட்டர் சுமந்து திரிந்த திமிங்கலத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. 

பொதுவாக திமிங்கலங்கள் தனது குட்டி இறந்தால், அதனை 2 வாரம் சுமந்து சென்று கொண்டிருக்கும். உயிரினங்களில் அதிகம் நட்புணர்வும் உறவினை கொண்டாடும் வகையைச் சேர்ந்த உயிரினம் திமிங்கலங்கள்.  ஆனால் இங்கு ஒரு பெண் திமிங்கலம் இதிலும் சாதனை படைத்துள்ளது. 

கொலம்பிய கடற்பகுதியில் இறந்த தனது குட்டியை சுமார் 17 நாட்கள், 1600 கிலோ மீட்டர் சுமந்து சென்றிருக்கிறது. பின்,  ஒரு பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. அந்தக் குட்டித் திமிங்கலம் ஜூலை 24ம் தேதி மரணத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும், எந்தவகையில் அது இறந்தது காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

தெற்கு பகுதியில் பிறக்கும் திமிங்கலங்களில் 25 சதவிகிதம் தான் உயிர் பிழைக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் அங்கு வாழும் 75 பெண் திமிங்கலங்களால் வெற்றிகரமாக குட்டிகளை ஈன்ற முடியவிலை. இதற்கான விரிவான ஆய்வு அங்கு நடந்து வருகிறது. தனது குட்டி தண்ணீரில் மூழ்கிவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த திமிங்கலங்கள் உடலை அதற்கு தோன்றும் தருணம் வரை சுமந்து செல்கின்றன.  

இது குறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் மேற்கு கடற்கரை பிராந்திய ஆய்வாளர்கள் கூறும்போது, ''அந்த தாய் திமிங்கலம் தன் மனதில் என்ன நினைத்து இவ்வாறு செய்கின்றது என்பது நம்மால் அறியமுடியாது. ஆனால் தாய்க்கும் குட்டித் திமிங்கலத்துக்கமான உறவு மிகவும் உறுதியானது. இது அறிவியல்பூர்வமான விஷயமாக தெரியவில்லை. இது ஒரு இறுதி சடங்கு தான்'' என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close