பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு திருடிய இளைஞர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Aug, 2018 08:17 pm
church-burglar-leaves-apology-note-after-theft-of-equipment

அமெரிக்காவில் என்னை மன்னித்துவிடுங்கள்... எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்! என கடிதம் எழுதிவைத்துவிட்டு திருடி சென்ற விநோத திருடனின் செயல் ஆச்சர்யமடையவைத்துள்ளது. 

அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் உள்ள பேராலயத்தில் கடந்த 19ம் தேதி லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக போலீசாரிடம் பேராலய பாதிரியார்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பேராலயத்தில் இருந்த சிசிடிவி காட்களை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். அந்த வீடியோ பதிவில் நள்ளிரவு 1 மணிக்கு திருடன் உள்ளே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உள்ளே வந்தபின் பொருட்களை எடுத்துக்கொண்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இதையறிந்த போலீசார் கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் ‘என்னைக் காப்பாற்றுங்கள்... என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே! எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று எழுதிவைத்துள்ளான். திருடியதற்காக வருந்தி மன்னிப்புக்கேட்ட அந்த திருடனின் செயலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close