ஏசு அழைக்கிறார்!- கத்திக் கொண்டே 16 மாதக் குழந்தையை கொன்ற தந்தை

  Padmapriya   | Last Modified : 23 Aug, 2018 08:48 pm
lewisville-father-accused-of-killing-16-month-old-son

ஏசு வருகிறார் என்று கூறியப்படியே மகனை, தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், 16 மாதமே ஆன ஆண் குழந்தையை அதன் தந்தையே சாலையில் வைத்து கத்தியால் குத்துக் கொன்றுள்ளார். 
இந்தக் கொலை சம்பவத்தை அந்த நபர் தனது வீட்டின் அருகே செய்துள்ளார். அப்போது கொலை நடப்பதை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், அதனை தடுப்பதற்கு அவர் வீட்டில் இருந்தே கொலையாளியை துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார். 

அவர் அவசர உதவிக்கு அழைத்த நிலையில், கத்தியால் குத்தப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது.  

இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுகாரர் கூறுகையில், ''கொலை நடந்ததை நான் நேரில் பார்த்தேன். அதனை தடுப்பதற்கே துப்பாக்கியால் அவரை காலில் சுட்டேன். ஏசு வருகிறார் என்று கத்தியபடியே அந்த பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்தான். குழந்தையை காப்பாற்ற முடியவில்லை '' என்றார்.  குழந்தையை கொன்ற நெஸ் என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரனையின்போது, ''இந்த உலகில் அனைவருமே பைத்தியங்கள். நானும் ஒரு பைத்தியம். ஏசு வருவார்'' என்று கூறியுள்ளார். நெஸ்ஸின் மனைவி கூறும்போது, தனது கணவர் சிறிது காலமாகவே பைபிளை அதிகமாக படித்து வந்ததாகவும் அத்துடன் தேவாலைய நிகழ்வுகளில் அதிகம் பங்கெடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

சம்பவத்தை தடுக்க துப்பாக்கிச்சூடு நடத்திய பக்கத்து வீட்டுக்காரர் மீது வழக்கு பதியப்படவில்லை. நெஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close