வெள்ளை மாளிகையில் மூழ்கும் அதிபர் ட்ரம்ப் 

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 05:03 am
trump-sinks-inside-oval-office

அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

வார இதழான டைம், தனது புத்தகத்தின் அட்டைப்படத்தில் போடும் படங்களுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அவரை மோசமாக சித்தரித்து பல டைம் வார இதழ்கள் வெளியிடப்பட்டன. வெள்ளை மாளிகைக்குள் புயல் வருவது போலவும், அந்த புயல் வெள்ளமாக மாறுவதாகவும், அது எதையுமே கண்டுகொள்ளாமல், 'எல்லாம் நலமே' என கூறிக்கொண்டு ட்ரம்ப் இருப்பது போல சமீப காலங்களில் டைம் அட்டை படத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன வந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களில், ட்ரம்ப்புக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சார அதிகாரி பால் மேனஃபோர்ட், வரி ஏய்ப்பு விவாகரங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நேரம், ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர், விசாரணை அதிகாரிகளிடம் ட்ரம்ப்புக்கு எதிராக அப்ரூவராக மாறியுள்ளார். இதனால் ட்ரம்ப் மீதான மக்கள் அபிமானம் கீழ்நோக்கி செங்குகொண்டிருக்கிறது, அதிகாரிகளும் தேர்தல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ட்ரம்ப்பை நெருங்கி வருகின்றனர். இதை சித்தரிக்குமாறு சமீபத்திய டைம் பத்திரிகை அட்டை படத்தில், வெள்ளை மாளிகையில் வெள்ளம் அடித்துச் செல்வது போலவும், அதில் ட்ரம்ப் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close