அமெரிக்காவில் அகாலி தள தலைவர் மீது தாக்குதல்

  Padmapriya   | Last Modified : 26 Aug, 2018 08:39 pm
akali-dal-leader-manjeet-singh-attacked-outside-gurudwara-in-us

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குருத்வாரா அருகே அகாலி தள தலைவர் மான்ஜித் சிங் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவின் வெளியே அகாலி தள தலைவரும் டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் தலைவராகவும் உள்ள மான்ஜித் சிங் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். 

இது குறித்து அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''20க்கும் மேற்பட்டவர்களால் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். நான் என் உதவியாளர்களிடம் எதுவும் பேச வேண்டாம், அமைதியை நிலைநாட்டுங்கள் எனக் கூறினேன். இந்த மக்களால் குருத்வாராவின் கண்ணியத்தை சீர்குழைத்து விட முடியாது''  எனதக் கூறினார். 

இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம், குருத்வாராவில் மர்ம நபர்கள் சிலரால் மான்ஜித் சிங் தாக்கப்பட்தது தொடர்பான வீடியோ காட்சியை வெளியிட்டது. அதில் தலைப்பாகை கட்டிய சிலர் மான்ஜித் சிங்கை தள்ளிவிட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. இது தொடர்பாக கலிபோர்னியா போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். 

ஏற்கெனவே கடந்த 21ஆம் தேதி நியூயார்க்கில் மான்ஜித் சிங் அவரது குடும்பத்தினருடன் சில காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.  எனவே இந்தத் தாக்குதலும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. சீக்கியர்கள் மீது இனவெறித் தாக்குதல், கருப்பு இனத்தவர் மீதான தாக்குதல் அங்கு மிகச் சாதாரணமாக நடந்து வருவது அங்கு வாழும் அயல் நாட்டவரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close