என்னை பத்தி கூகுள் தப்பு தப்பா சொல்லுது: ட்ரம்ப் கோபம்

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 10:48 am
trump-takes-on-google-for-news-against-him

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூகுள் இணையதளம் தனக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பல்வேறு விசாரணைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் தலைசிறந்த செய்தி நிறுவனங்கள் தன்னை பற்றி தவறான செய்திகள் பரப்புவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். பிரபல சி.என்.என், வாஷிங்க்டன் போஸ்ட் போன்ற செய்தி நிறுவனங்களும் இதில் மிஞ்சவில்லை. இந்நிலையில், கூகுளில் தன்னை பற்றி தவறான செய்திகள் மட்டுமே முன்னிலை படுத்தப்படுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

ட்ரம்ப் ஆதரவு செய்தி நிறுவனங்கள் கூகுளில் இருந்து மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பல ட்ரம்ப் ஆதரவு செய்தி நிறுவனங்கள், போலி செய்திகள் வெளியிட்டதற்காகவும் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதாலும் மட்டுமே தடை செய்யப்படுவதாக கூகுள் தரப்பில் கூறப்படுகிறது. ட்ரம்ப் இவ்வாறு குற்றம் சாட்டியதை தொடர்ந்து, கூகுள் மீது விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், தங்களுக்கு எதிராக செய்தி வரும் காரணத்தால் கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் அதிபரால் தடுக்க முடியாது என ட்ரம்ப் கட்சியினர் உட்பட பலரும் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close