குழந்தை முன் தாயின் தலை துண்டிப்பு: அமெரிக்காவில் தொடரும் 'மூடநம்பிக்கை' படுகொலைகள்!

  Padmapriya   | Last Modified : 01 Sep, 2018 05:44 pm
timothy-paul-hernandez-32-reportedly-told-police-that-he-killed-his-girlfriend-because-she-refused-to-repent

வாஷிங்டன் நகரத்தில் ஒருவர் தனது குழந்தையின் கண் முன்னே தனது மனைவியின் தலையை கொடூரமாக துண்டித்து கொலை செய்துள்ளார். 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தின் மாவுடன் மவுன்ட் மேர்நான் பகுதியில் வசித்து வந்தவர் டிம்மோதி பால் (32). இவரது மனைவி வநீசா காஸ் மற்றும்  3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் திடீரென டிம்மோதி, தன்னுடைய மகள் கண் முன்னே தன மனைவியை மிகவும் கொடூரமாக தலையை வெட்டி, கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை டிம்மோதி தன்னுடயை மனைவியின் கழுத்தை திடீர் என அறுத்து கொலை செய்தது குறித்து அவரை போலீஸ் கைது செய்தது. இது குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் விசித்திரமான காரணத்தை கூறியுள்ளார். 

தன்னுடைய மனைவியை கொலை செய்து விடுமாறு கடவுள் கூறியதால் மட்டுமே அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கடவுளின் வார்த்தைகளை அவள் பின்பற்றவில்லை என்றும், இதனால் கடவுள் தன்னிடம் அவர் பரிதாபத்திற்குரியவள் இல்லை அவளை கொலை செய்து விடுமாறு கூறினார். அதனால் தான் தன்னுடைய மனைவியை கொலை செய்ததாக கூறினார். இந்தக் கொடூரச் சம்பவத்தை பார்த்த குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னுடைய தந்தை ஒரு பெரிய கத்தியை வைத்து தனது அம்மாவை வெட்டியதாகவும். அப்போது அம்மாவின் கண்கள் மூடிய நிலையிலும், ரத்தம் வடித்த நிலையிலும் இருந்ததாக தெரிவித்துள்ளார். 

தனது தாயின் கொலையை கண் முன்னே பார்த்தால், குழந்தை மன ரீதியாக மிகவும் இவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அதனால் குழந்தைக்கு மருத்துவக்குழுவினர் முறையான கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதேபோல, கடந்த வாரத்தில், ஏசு அழைக்கிறார் என்று கத்திக்கொண்டே சாலையில் தனது கைக்குழந்தையை அதன் தந்தையே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close