வோட்க்காவில் ஓடும் சூப்பர் பைக்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:35 am
american-super-bike-runs-in-vodka

அமெரிக்காவைச் சேர்ந்த   ரயான் மொண்டொகொமரி  தன் பைக்கில் பெட்ரோலுக்கு பதிலாக வோட்காவை பயன்படுத்தி சாதனை செய்துள்ளார்.   41 வயதாகும் இவர் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. பைக் பிரியரான ரயான் நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த யமகா எக்ஸ்.எஸ்650 பைக்கை சரி செய்துள்ளார். அந்த பைக்கின் என்ஜினில் பெட்ரோலுக்கு பதிலாக வோட்காவை ஊற்றி அதை வெற்றிகரமாகவும் ஓட்டினார்.  இந்த  பைக்கை மணிக்கு 181 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சாதனை படைத்துள்ளார்  ரயான். இதை தொடர்ந்து எரிபொருளாக பயன்படுத்திய  வோட்காவுக்கு `ஹெட்’எனவும், தன்னுடைய பைக்குக்கு ‘சடன் விஸ்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.

இந்த  ‘சடன் விஸ்டம்’ பைக்கையும் எரிபொருளையும்  தயார் செய்வதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகியுள்ளதாக ரயான் தெரிவித்துள்ளார். எரிபொருளாகப் பயன்படுத்திய வோட்காவை குடிக்க முடியாது என்று ரயான் கூறியுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close