முட்டாள், பொய் புளுகுனி, குழந்தை - ட்ரம்ப்பை விமர்சிக்கும் வெள்ளை மாளிகை ஊழியர்கள்

  shriram   | Last Modified : 05 Sep, 2018 05:38 pm
idiot-child-liar-white-house-staff-blast-trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பற்றி வெள்ளை மாளிகையில் பணியாற்றும் உயரதிகாரிகளும், ஊழியர்களும் படு மோசமாக விமர்சனம் செய்வதாக புத்தகம் ஒன்று வெளியாகி, அந்நாட்டில் மிகப்பெரிய அளவு சர்ச்சையை கிளப்பி வருகிறது.

தொழிலதிபராக இருந்து அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், சர்ச்சைகளுக்கு மையப்புள்ளியாக விளங்கி வருகிறார். ரஷ்யாவுடன் கூட்டு சதி செய்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது, தனக்கு எதிரான விசாரணையை முடக்க முயற்சி செய்தது, தேர்தல் விதிமுறைகளை மீறியது, கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்து அவர் வாயை அடைக்க முடிவு செய்தது, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர்கள், நிருபர்கள் என பலர் தங்கள் அனுபவங்களை வைத்து புத்தகங்கள் வெளியிட்டு, ட்ரம்ப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

அந்த வரிசையில் பாப் வுட்வார்டு எனும் நிருபர் 'ஃபியர்' (அச்சம்) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை ட்ரம்ப் பற்றி கூறிய விஷயங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகளின் தலைவர் ஜான் கெல்லி, 'ட்ரம்ப் ஒரு முட்டாள்' என கூறியதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், "ட்ரம்ப்பிடம் ராணுவ விவகாரங்கள் குறித்து பேசுவது ஏதோ 5வது படிக்கும் குழந்தையிடம் பேசுவது போல உள்ளது" என கூறியுள்ளாராம். 

தனக்கு எதிராக விசாரணை செய்துவரும் சிறப்பு விசாரணை கமிட்டியிடம் ட்ரம்ப் வாக்குமூலம் கொடுக்க ஆசைப்பட்டார், என கூறப்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப்பால் 'ஒரு நொடி கூட உண்மையை சொல்ல முடியாது' என கூறி அதற்கு வெள்ளை மாளிகை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், "நீங்கள் வாக்குமூலம் கொடுப்பதும், ஜெயிலுக்கு போவதும் ஒன்று தான்" என ட்ரம்ப்பிடம் வழக்கறிஞர் ஜான் டவுடு கூறினார் எனவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புத்தகத்தில் வந்தது அனைத்தும் பொய் என ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close