அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இந்தியர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஒஹையோவின் சின்சினாட்டி நகரில் உள்ள பிஃப்த் தர்ட் வங்கி கிளையில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கியுடன் வந்த ஓமார் பெரஸ் என்பவர், வங்கியில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் துவங்கினார். இதில், இந்தியர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஆந்திராவின் குண்டூர் பகுதியை சேர்ந்த ப்ருத்விராஜ் கண்டெப்பி இதில் கொல்லப்பட்டார். 25 வயதான அவர், வங்கியின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். 48 வயதான லூயிஸ் பிலிப்பெ கால்டெரான் , மற்றும் 64 பவயதான ரிச்சர்ட் நியூகம்மர் ஆகியோரும் குண்டடி பட்டு இறந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
கொலையாளி ஓமார் பெரஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ப்ருத்விராஜின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, வடஅமெரிக்க தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு முயற்சிகள் எடுத்து வருகிறது.
newstm.in