அமெரிக்க வங்கி துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 04:23 pm
sudden-gunshot-in-american-bank-3-killed

அமெரிக்காவின் ஒகையோ மாநிலம் சின்சினாட்டி  நகரில் ஃபிப்த் தேர்டு என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. நேற்று காலை இங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதில் ஆந்திர இளைஞர்  உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.  தகவல் அறிந்து  விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை சரமாரியாக சுட்டனர். அவர் ஒகையோ மாநிலத்தின் நார்த் பெண்ட் நகரைச் சேர்ந்த ஒமர் என்ரிக் சாந்தா பெரஸ்  என அடையாளம் காணப்பட்டார். இவருக்கு வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்ட பிறகும் அவரின் இந்த வெறிச்செயலுக்கான நோக்கம்  தெரியவில்லை. 

இதனிடையே அந்த இளைஞரால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த பிருத்விராஜ் கன்டேபி , வயது 25  எனத் தெரியவந்துள்ளது. இவர் அந்த வங்கியில் கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். மேலும்  இந்த சம்பவத்தில் கொல்லப் பட்ட மற்ற இருவர் பிலிப் கால்டிரோன் (48), ரிச்சர்டு நிவ்கமர் (64) என அடையாளம் காணப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close