பிரபல ராப் பாடகர் மேக் மில்லர் திடீர் மரணம்: அதிர்ச்சியிலும் சோகத்திலும் ரசிகர்கள் 

  Padmapriya   | Last Modified : 08 Sep, 2018 04:31 pm
mac-miller-us-rapper-found-dead-at-home-aged-26

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இளம் ராப் பாடகரான மேக் மில்லர் (26) மரணமடைந்தார். 

பிரபல ராப் இசைப் பாடகர் மேக் மில்லர் தனது கலிஃபோர்னியா வீட்டில் இறந்த நிலையில் கிடந்ததாக லாஸ் எஞ்சலஸ் கார்னர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். 

மேக் மில்லரின் மரணம் குறித்து அமெரிக்க போலீஸார் குறிப்பிடுகையில், "மேக் தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இரவு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதிகப்படியான போதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் அவர் மரணம் அடைந்திருக்கிறார்.  அவரது உயிர் 11.51 மணியளவில் பிரிந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, ''அவன் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சம் போல் இருந்தான். உங்களின் அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும். அவனது இறப்பைப் பற்றி வேறு ஏதும் கூடுதலாகப் பேச விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளனர். 

இளம் ராப் பாடகரான மேக், குறைந்த கால கட்டத்தில் பிரபலமான தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். அவரது இறப்பை அடுத்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் குறிப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இசைக் கலைஞர்கள் பலரும் அவரது மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.

2018ல் மேக் மில்லர் ''செல்ஃப் கேர்'' என்ற ராப் தொகுப்பை வெளியிட்டார். 201 6ல் டாங் என்ற தொகுப்பு வெளியானது. 2011ல் வெளியான Mac Miller - Donald Trump என்ற ஆல்பம் மிகப் பிரபலமானதாகும். 

 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close