ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு: ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் கைது

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2018 03:56 pm
papadopoulos-sentenced-to-14-days-in-jail-for-lying-to-fbi-in-mueller-probe

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஜார்ஜ் பபடோபோலஸ் ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற் கொண்டவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜார்ஜ் பபடோபோலஸிடமும் (முன்னாள் வெளியுறவு கொள்கை ஆலோசகர்) விசாரணை நடத்தியது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, ஜார்ஜை கைது செய்து 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க அமெரிக்க மாவட்ட நீதிபதி ரந்தோல்ப் மாஸ் உத்தரவிட்டுள்ளார். 

தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டதாகவும், தன்னை மீட்டுக் கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பாபுடோபுலஸ் கேட்டுக் கொண்டார்.

சிக்காகோவை சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் பிரசாரக் குழுவில் தன்னார்வ வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக சேருவதற்கு முன் லண்டனில் பெட்ரோலிய ஆய்வாளராக இருந்தார். அதன் பிறகு, மால்டா நாட்டைச் சேர்ந்த மர்மமான பேராசிரியரிடம் பாபுடோபுலஸ் நட்பு வைத்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் குறித்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் தங்களிடம் உள்ளதாக அந்த பேராசிரியர் பாபுடோபுலஸிடம் தெரிவித்துள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close