ட்ரம்ப்பின் பதவியேற்பு கூட்டம்: போட்டோஷாப் செய்ததாக போட்டுடைத்த போட்டோகிராஃபார்!

  Padmapriya   | Last Modified : 09 Sep, 2018 08:35 pm
trump-inauguration-crowd-photos-were-edited-after-he-intervened

அமெரிக்க அதிபராக டோனால்டு ட்ரம்ப் பதவியேற்ற போது, அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியானது அவை அறிவுறுத்தலின்பேரில் போட்டோஷாப் செய்யப்பட்டது என அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சமயத்தில் அவரது பதவியேற்பு குறித்து பேசிய செய்தித்துறை அமைச்சர், ''அமெரிக்க வரலாற்றிலேயே ட்ரம்ப் பதவியேற்பு விழாவிற்கு வந்த கூட்டம் தான் மிக அதிகம்'' என தெரிவித்தார். 

அப்போது அந்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளானது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபோது வந்தக் கூட்டத்தை விட ட்ரம்ப் பதவியேற்புக்கு வந்தக் கூட்டம் குறைவு என ஆதாரங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். 


 
இந்த நிலையில், ட்ரம்பின் பதவியேற்பு கூட்டத்தில் கூடிய கூட்டத்தின் உண்மை தண்மையை அறிய கார்டியன் செய்தி நிறுவனம் அதற்காக அமெரிக்காவில் உள்ள தகவல் அறியும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அமெரிக்க அரசு வெளியிட்ட பதவியேற்பு விழா புகைப்படங்கள் தொடர்பான தகவல்களை கேட்டது.

இதற்கு பதிலளித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக அரசு தரப்பில் வெளியான படம் போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டது. 

மனுவுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட பதிலில், பதவியேற்பு விழாவில் போதிய கூட்டம் கூடாத காரணத்தால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், பின்னர் அதிக கூட்டம் திரண்டது போன்று எடிட் செய்ய வலியுறுத்திய நிலையில், புகைப்படத்தில் கூட்டம் இல்லாத காலி இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் இருப்பது போல் போட்டோஷாப் செய்து போலி படம் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனையே வெள்ளை மாளிகை போட்டோகிராஃபர் கார்டியன் பத்திரிகையிடமும் கூறியுள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close