கோபத்தில் அமெரிக்க மக்கள்; அதள பாதாளத்தில் ட்ரம்ப்!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 12:13 pm
after-week-of-chaos-trump-s-approval-falls-further

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான மக்கள் அபிமானம் அதல பாதாளத்தில் உள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்து 6% மக்கள் அபிமானம் குறைந்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தினமும் பேசப்பட்டு வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். ரஷ்யாவுடன் கூட்டுச்சதி செய்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக ஒரு புறம் விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு புறம், வடகொரியா ட்ரம்ப்புக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் போனது; அண்டை நாடுகளுடன் நடத்தி வரும் வர்த்தகப் போர்; வெள்ளை மாளிகை அதிகாரிகள் ட்ரம்ப்பை 'முட்டாள்' என்றும் "5 வயது குழந்தை போன்ற புரிதல் கொண்டவர்" என்றும் சித்தரிப்பதாக வெளியாகியுள்ள புத்தகம்; பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்ப் நாட்டை ஆள தகுதி இல்லாதவர்" என கூறியது; இப்படி பல சர்ச்சைகள் தினம் தினம் வெடித்து வருகின்றன.

இதன் தாக்கம் மக்களிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பில் பிரதிபலித்துள்ளது. கடந்த மாதம் ட்ரம்ப்பின் ஆட்சியின் மீது 42% மக்கள் அபிமானம் இருந்த நிலையில், அது தற்போது 36% என குறைந்துள்ளது. வலதுசாரிகள் மத்தியில் ட்ரம்ப்புக்கு ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மாதம் 47 சதவீதமாக இருந்த நடுநிலை மக்களின் அபிமானம், 31 சதவீதமாக சரிந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close