அமெரிக்காவில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி 5 பேர் பலி! 

  முத்துமாரி   | Last Modified : 15 Sep, 2018 09:03 am
florence-kills-5-including-infant-in-north-carolina-officials-say

அமெரிக்காவில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின்  கடலோரப் பகுதிகளான வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தேசிய வானிலை மையம் அளித்த தகவலின்படி, இங்கு தற்போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. 

புயல் காற்றினால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மேலும்பி வருகின்றன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புயல் காற்றின் வேகம் குறைந்தாலும்  பாதிப்புகள் குறையவில்லை என அமெரிக்க தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close