சீனாவுடன் அடுத்த வணிக போருக்கு தயாராகும் ட்ர்மப்!

  shriram   | Last Modified : 16 Sep, 2018 07:33 pm
trump-to-put-new-tariffs-on-chinese-products

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக வணிகப் போரில் ஈடுபட்டு வருகிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க பொருட்களின் மதிப்பை அதிகரிக்க ட்ரம்ப் அரசு திட்டமிட்டது. 

இந்நிலையில், எஃகு, அலுமினியம் உட்பட பல இறக்குமதி பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக மற்ற நாடுகளும்  அமெரிக்க பொருட்கள் மீது பதில் வரி விதித்தன. இந்நிலையில், சீனா மீது மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. 

இணைய சேவைகள், பிளாஸ்டிக், டயர் உட்பட பல பொருட்கள் மீது இந்தமுறை வரி சுமத்தப்படுகிறது. நாளை இந்த கூடுதல் வரி பற்றிய அறிவிப்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் அளவுக்கு வரி சுமத்தப்படலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக 25% வரை வரி சுமத்தப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சீன அரசு தொடர்ந்து மோசமான வணிக கொள்கைகளை கடைபிடித்து வருவதால், அதற்கு பதிலடியாக கூடுதல் வரி விதிக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லிண்டசி வால்டர்ஸ் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close