'இவருக்கு புயலே பரவாயில்லை' - வைரலாகும் டிவி நிருபர்!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 06:27 am
fake-reporting-of-hurricane-florence-goes-viral

அமெரிக்காவில் ஃபிளாரன்ஸ் எனும் அசுர புயல் கடந்த  நாட்களில் கிழக்கு மாகாணங்களை கடுமையாக தாக்கியது. புயல் என்றாலே தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்கள் கற்றுக்கொண்ட  வித்தையையும் களத்தில் இறக்கி  செய்வார்கள்.  அப்படி ஒரு அமெரிக்க நிருபர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மழையிலும் வீசும் புயலிலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறார் அந்த நிருபர். கேமரா அவரை படம் பிடித்துக் கொண்டிருக்கும் அதே நேரம்,  பின்னணியில் இரண்டு இளைஞர்கள் சாதாரணமாக நடந்து செல்கிறார்கள். புயல் தன்னை அடித்துச் செல்வது போல நடிக்கும் அந்த நிருபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் கேலிக் கூத்தானது. ட்விட்டர், பேஸ்புக் என லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து, அந்த நிருபரை கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நிருபர் புல் தரையில் நின்று கொண்டிருந்ததால் அவரால் நேராக நிற்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையை யாரும் ஏற்பதாக தெரியவில்லை. 

வீடியோவை பார்த்து நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close