சுறா மீன் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார் !

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 04:59 am
20-year-old-killed-by-a-shark-in-america

அமெரிக்காவின் மசசூசட்ஸ் கடற்கரையில் சுறா மீன் தாக்கியதில் 20 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  1936ஆம் ஆண்டுக்கு பிறகு சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.

இச்சம்பவம் நடந்த உடனே தண்ணீரில் இருந்து அந்த நபரை வெளியே இழுத்து முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயமடைந்ததால் சிகிட்சை பலனின்றி அந்த இளைஞர் மருத்துவமனையிலேயே  உயிரிழந்தார்.

கடலில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த இளைஞரை சுறா தாக்கியதாக கூறப்படுகிறது.  உயிரிழந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் உள்ள கடற்கரைகள் அனைத்திலும் நீச்சலடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுறா தாக்கிய காட்சி, மோசமான கனவு போல இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் முன்னணி செய்தி நிறுவனத்திற்க்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது "15 அடி உயரத்திற்கு தண்ணீர் மேல் எழும்பியது. அதன் வாலை பார்த்தேன். பின் அது மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. அங்கு இருந்த நபருக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் தெளிவாக தெரிந்தது".

மசசூசட்ஸ் கடற்கரையில்  இந்தாண்டு சுறாக்களை காண்பது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட்மாதம்  61 வயது நரம்பியல் மருத்துவரான வில்லியம் லைடன் இதே போல சுறாவால் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close