சீனா மீது 200 பில்லியன் டாலர் வரி: ட்ரம்ப் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 07:34 pm
trump-announces-200-billion-dollar-taxes-on-china

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன  இறக்குமதி மீது புதிய வரிகளை சுமத்தியுள்ளார். 200  பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த புதிய வரிகள், இணைய சேவைகள், பிளாஸ்டிக், ரப்பரால் தயாரிக்கப்படும் பொருட்கள் உட்பட பலவற்றின் மீது விதிக்கப்படும். 

ஏற்கனவே சீனா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதற்கு அமெரிக்க பொருளாதார ஆலோசகர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் ட்ரம்ப் தொடர்ந்து வரிகளை சுமத்தினார். அமெரிக்க பொருட்களின் மதிப்பு சினாவால் தொடர்ந்து குறைந்து வருவதாக ட்ரம்ப் குற்றம்சாடினாலும், இந்த கூடுதல் வரி அமெரிக்க மக்கள் மீது தான் வந்து விழும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில், சீனா மீது புதிய வரிகளை ட்ரம்ப் அரசு சுமத்தியுள்ளது. 200 பில்லியன் டாலர்கள் மத்தியிலான இந்த வரிகளை நேற்று ட்ரம்ப் அறிவித்தார். அப்போது அவர், இதற்கு பதிலடியாக சீனா பதில் வரிகளை சுமத்தினால், மேலும் 267 பில்லியன் டாலர்கள் மத்தியிலான புதிய வரிகளை சுமத்துவோம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த புதிய வரிகளில் சீனாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், பைக் ஹெல்மெட், குழந்கைகளுக்கான கார் சீட் போன்ற பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close