'ட்ரம்ப் கோட்டை' வச்சுருவோம்: அமெரிக்க அதிபருக்கு ஐஸ் வைக்கும் போலந்து!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 04:51 pm
trump-fort-poland-president-want-us-military-base-in-poland

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போலந்து அதிபர் அண்ட்ரெஜ் டூடா, தனது நாட்டில் அமெரிக்க ராணுவ தளம் ஒன்றை அமைக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்க்கு ட்ரம்ப் கோட்டை என பெயரிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன், க்ரைமியா பிரச்னைக்கு பிறகு, ரஷ்யாவின் அண்டை நாடுகள், தங்கள் எல்லையையும் ரஷ்யா கைப்பற்ற முயலும் என்ற அச்சுறுத்தலிலேயே இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, தனது எல்லை பாதுகாப்பை அதிகரிக்க, அமெரிக்க ராணுவ தளத்தை நிறுவ முயற்சி எடுத்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபர் அண்ட்ரேஜ் டூடா, வெள்ளை மாளிகைக்கு சென்று அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். 

சந்திப்புக்கு பின்னர், அவர் ட்ரம்ப்புடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக போலந்து அதிபர் அமெரிக்க ராணுவ தளம் அமைக்க கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். அதற்காக 2 பில்லியன் டாலர்களை கொடுக்க தயாராக இருப்பதாக போலந்து அதிபர் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.  

இதுகுறித்து பேசிய போலந்து அதிபர், அமெரிக்காவின் றாNயுவ தளம் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவுக் அவசியம் எனவும், அப்படி அமைக்கப்பட்டால், அது 'ட்ரம்ப் கோட்டை' என அழைப்போம் எனவும் கிண்டலாக கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close