ரேம்ப் வாக்கின் போதே பிரசவ வலி: ரிஹானா நிகழ்ச்சியில் பிள்ளை பெற்ற பிரபல மாடல்! 

  Padmapriya   | Last Modified : 19 Sep, 2018 03:57 pm
pregnant-american-model-goes-into-labour-while-walking-the-ramp-for-rihanna

நியூயார்க்கில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பிரபல மாடல் ஸ்லிக் வூட்டுக்கு என்பவருக்கு ரேம்ப் வாக் செய்தபோதே பிரசவ வலி ஏற்பட்டது. இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் ஃபேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி என்ற உள்ளாடைகளுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது. நியூயார்க் ஃபேஷன் வீக்கின் நிறைவு நிகழ்ச்சியான இதில் பல மாடல்களும் பங்கேற்றனர்.

இந்த ஃபேஷன் ஷோவில் நிறைமாத கர்ப்பிணியான ஸ்லிக் வூட்ஸ் (வயது 22) கலந்து கொண்டார். இவரது இயற் பெயர் சைமன் தாம்சன். ஷோவுக்காக கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து சென்றார். நிறைமாக கர்ப்பிணியாக வளம் வந்த அவர் அனைவரையும் ஈர்ப்பதாக அமைந்தார். பலரும் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். 

ஃபேஷன் ஷோவில், ஒய்யார நடை நடந்து கொண்டிருந்த மாடல் ஸ்லிக் வூட்ஸுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள், ஸ்லிக் வூட்ஸ்-ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் குழந்தைக்கு சபீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்லிக் வூட்ஸின் கணவர் தெரிவித்துள்ளார்.

ஸ்லிக் வூட்ஸின் கடமை மீதான பற்றுதான் அவரை நிறைமாத நிலையிலும் ரேம்ப் வாக்கில் ஈடுபட வைத்துள்ளது என அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் துளி கூட கவலையின்றி ஃபேஷன் ஷோவில் பங்கேற்றது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close