அரசு உதவிபெறுபவர்களுக்கு க்ரீன் கார்டு கிடையாது!: ட்ரம்ப் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 06:11 am
trump-to-deny-green-card-to-recipients-of-welfare

அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, அடுத்ததாக, அரசு உதவிபெறுவோருக்கு க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்த முடிவெடுத்துள்ளது. 

எச்1பி, எச் 4 விசா என இந்தியர்கள் அதிகமாக அமெரிக்காவில் குடியேற பயன்படுத்தும் சலுகைகள் மீது பல்வேறு தடைகளை விதித்து வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகாரிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், அமேரிக்காவில் நிரந்தரமாக குடியேற விண்ணப்பிக்கும் மக்களுக்கு, புதிய தடை ஒன்றை போட முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்படி, அமெரிக்காவில் வசித்து வரும் மக்கள், நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, அமெரிக்க அரசு வழங்கும் இலவச உணவு மற்றும் நிதியுதவி போன்ற நலத்திட்டங்கள் எதையும் பெறும் நிலையில் இருக்கக்கூடாது, என தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அந்நாட்டு, உள்துறை பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், க்ரீன் கார்டு பெற விரும்புபவர்கள் தாங்கள் நலத்திட்டங்களை பெறும் நிலையில் இல்லை என காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி, குடியேற விரும்பும் மக்கள், தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு சம்பாதிக்கும் நிலையில் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த நடவடிக்கையால் பல இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் அரசின் இந்த முடிவுக்கு, பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close