4.6 லட்சம் ரூபாய்க்கு விலைபோனது காந்தியின் கடிதம்

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 05:06 am
gandhi-s-letter-sold-for-4-6-lakh-rupees

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு விலை போனது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஆர்ஆர் ஏல நிறுவனம் சமீபத்தில்  நடந்திய ஏலத்தில் இந்த கடிதம் ஏலம்  விடப்பட்டது. அந்தத் கடிதத்தை ஒருவர் ரூ.4.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார். 

இந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு எழுதியுள்ளார். பாபுவின் ஆசீர்வாதங்கள் என்று மகாத்மா காந்தி அதில் கையெழுத்திட்டுள்ளார். 

"நூற்பாலைகள் குறித்து நாம் என்ன நினைத்தோமோ அதுதான் நடந்துள்ளது. இருந்தபோதும் நீங்கள் கூறியதுதான் சரி. அனைத்துமே தறிகளை நம்பியே உள்ளது. கை ராட்டை முக்கிய மானது." இவ்வாறு அதில் காந்தி எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் எழுதப்பட்ட தேதி விவரங்கள் அதில் இல்லை என்று ஆர்ஆர் ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு  தெரிவித்துள்ளது. சுதந்திரப்  போராட்டத்தின்போது கை ராட்டையும், உள்நாட்டு கதராடைகளும் முக்கிய பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close