3 மாத குழந்தையோடு ஐ.நா பொதுக்கூட்டம்: நியூஸி. பிரதமருக்கு குவியும் பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 05:25 pm
new-zealand-prime-minister-s-newborn-daughter-steals-the-show-at-the-un

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன் தனது 3 மாத பச்சிளங் குழந்தையுடன் ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்றது பரவாலான பேசுபொருள் ஆகியுள்ளது. இதனால் அவர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் பிறந்து கடந்த 3 மாதங்களே ஆனா தனது பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்றார். கைக் குழைந்தையுடன் ஒரு பிரதமர் ஐநா கூட்டத்தில் பங்கேற்பது இது தான் முதன்முறை. அந்தப் பெருமையையும் ஜசிந்தா அர்டெர்ன் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

தாய்மைக்கு தயாரான நிலையிலும் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த போதிலும் பிரதமராக தனது அன்றாட பணிகளை ஜசிந்தா அர்டெர்ன் தொடர்ந்து வந்து அனைவரது பாராட்டுகளை பெற்று வந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்த முதலிலிருந்தே பிரதமர் அலுவலக பணிகளையும் அவர் வீட்டிலிருந்தே மேற்கொண்டு வருகிறார். 

இருப்பினும் குழந்தை பிறந்து 3 மாதாமே ஆவதால், ஜெசிந்தா ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகங்கள் அந்நாட்டு ஊடகங்களில் எழுந்தன. அனால் அனைவரயும் வாயடைக்கும் வகையில் அவர் கலந்துகொண்டதோடு அல்லாமல் ஒரு தாயாகவும் தனது கடமையை விட்டுக்கொடுக்காமல் அவர் குழந்தையுடன் ஐ.நா. பொது கூட்டத்துக்கு வந்தது அங்கிருந்தோரை திரும்பிப் பார்க்க வைத்தது. 

இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அளித்த பேட்டியில், ''நான் தாய்மை அடைந்த போதிலும் என்னுடைய குழந்தையை வைத்துக்கொண்டு என்னுடைய பணியைச் செய்ய முடியும். பல்வேறு இடங்களில் நீங்கள் குழந்தையுடன் பணி செய்ய இயலாது. என்னால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியுமென்றால், அதற்கான மாற்றத்தையும் உருவாக்கச் சிந்திக்கவும் முடியும்'' எனத் தெரிவித்தார்.

ஐ.நா. அடையாள அட்டை பெற்ற 3 மாத குழந்தை!

ஒரு நாட்டின் பிரதமாராக இருந்தாலும் கூட, நினைத்த நேரத்தில் ஐ.நா தலைமையகத்தில் உலக தலைவர்கள் சூழ இருக்கும் வளாகத்துக்குள் நுழைந்துவிட முடியாது. இதனால் துணையாக வந்த கணவர், கிளார்க் கேபோர்ட்டுக்கும், குழந்தை நேவ் டி அரோஹாவுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. கணவர் கிளார்க் பத்திரிகையாளர் ஆவர்.

கூட்டத்தில், ஜெசிந்தா பேச வேண்டிய நேரம் வந்ததும், குழந்தையைக் கணவர் கிளார்க் கேபோர்டிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். இதனால்,  ஐ.நா மாநாட்டு அரங்கில் பலரது கண்களும் ஊடகங்களின் பார்வையும் நேவ் டி அரோஹா மேலேயே இருந்தது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close