அடிமைகளாக எந்த நாடும் விரும்பாது: அமெரிக்காவை சாடிய ஈரான் அதிபர் 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 02:53 pm
president-trump-s-efforts-to-isolate-iran-at-the-u-n-backfired

ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் ஈரான் அமெரிக்காவை கடுமையாக சாடியது. இதனால் வாக்குவாதம் முற்றியதால் சலசலப்பான சூழல் ஏற்பட்டது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை தலைமையகத்தில் 73வது ஆண்டுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்று சர்வதேச பிரச்னைகளை எழுப்பு வருகின்றனர்.  இதில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான், சீனா போன்ற நாடுகள் 
ஜாம்பவான்கள் போல நடந்துகொள்ள விரும்புகின்றனர். 35 நிமிட பேச்சில் ட்ரம்ப் இவ்வாறான பேச்சையே தொடர்ந்து பேசினார்.  சீனா வர்த்தகத்தை மட்டுமே நோக்கமாகவும் சுயலாபத்துக்காகவும் செயல்படுகிறார். அதற்கு பிற நாடுகளை பலிகடா ஆக்கிறது. 

இறுதியாக அவர் பேசும்போது, ''உலக நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவ வேண்டியது அவசியம். ஈரான் தலைவர்கள் அவர்களது நாட்டிலேயே குழப்பத்தையும் மற்றும் மரணங்களை விதைக்கின்றனர். பக்கத்து நாடுகளுடன் கூட அவர்கள் இணக்கமாக போக நினைப்பதில்லை. சுயமாக அவர்களது இறையாண்மையையும் உரிமையும் மதிக்க மறுக்கிறார்கள். ஒப்பந்தங்களும் கைஎழுத்துகளும் காற்றில் பறக்கின்றன. எதற்கு மதிப்பு இல்லை. 

ஈரான் அதிபர் ரப்பானி ஊழல் நிறைந்த சர்வாதிகாரியாக உள்ளார். அதனால் தான் சிரியா, ஏமன், லெபனான் போன்ற கிசக்கு நாடுகளில் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்'' என்றார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய  ஈரான் அதிபர் ரப்பானி, ''சிறு நாடுகளை தங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. இதை எந்த நாடும் ஏற்காது. ஒப்பந்தங்களை ஏற்படுத்தியபின், அவை நிறைவேற்றப்படும் விதத்தை ஆய்வு செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். 
இன்றைய உலகச்சூழ்நிலையில் யாரையும் எந்த நாட்டாலும் கட்டுப்படுத்த முடியாது, ஆட்சி செய்ய நினைக்க முடியாது'' என அமெரிக்காவை கடுமையாக சாடினார்.  இதனால் அவையில் சலசலப்பான சூழல் நிலவியது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close