பயங்கரவாதத்தை நியாயப்படுத்தம் பாகிஸ்தான்: சுஷ்மா ஸ்வராஜ் தாக்கு 

  Padmapriya   | Last Modified : 30 Sep, 2018 10:29 pm
sushma-swaraj-at-un-pakistan-is-harboring-terrorists

பயங்கரவாதத்தை ஆதரித்து அவர்களது செயல்களை நியாயப்படுத்தும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார். 

ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று வருகிறார். இந்தக் கூட்டத்தில் உலகமே தற்போது பெரும் சவாலாக ஏதிர்கொள்ளும் பருவநிலை மாற்றத்தையும், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து விவாதங்கள் பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா பேசுகையில், ''எங்களது அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கான அடித்தளமாக உள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில், அந்த நாடு ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் மிக ஆபத்தான எதிரியாக அறிவித்த போது அவனை உலக நாடுகளில் பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது. அந்த சமயத்தில் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்து துரோகம் செய்தது அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் தான்.

பயங்கரவாதிகளை விட மனித உரிமைகளை அதிகமாக மீறுவது யார்? பயங்கரவாதிகளை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்வதில்லை. பயங்கரவாதத்தை பரப்புவதில் எங்களது அண்டை நாடு நிபுணராக உள்ளது. வேறு எங்கும் இல்லாமல், பயங்கரவாதத்தை எங்களது அண்டை நாடு வளர்த்து வருகிறது. அவர்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவத்தில்லை. மாறாக பேச்சுவார்த்தை மூலம் சமாளிப்பதில் மட்டும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதன் மூலம் நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக உள்ளோம். பேச்சுவார்த்தைகள் சுமூக தீர்வை தரும் என நம்புகிறோம். ஆனால், பாகிஸ்தானுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். இன்னும் பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

கடந்த 5 வருடங்களில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதம் குறித்தும் அதனை பாதுகாப்பவர்கள் குறித்தும் இந்தியா தவறாமல் பேசி வருகிறது. பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.  ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியும், ஆயுதங்களை வழங்கியும் அவர்கள் நாட்டின் விடுதலை வீரர்கள் போல் கொண்டாடுகிறார்கள் " என்று கடுமையாக சாடினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close