கிம் எழுதிய கடிதங்களால் காதலில் விழுந்தேன்: ட்ரம்ப் பகீர்

  shriram   | Last Modified : 30 Sep, 2018 05:11 pm
fell-in-love-with-kim-jong-un-trump

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னுடன் தான் பல கடிதங்கள் பரிமாறிக் கொண்டதாகவும், அதிலிருந்து அவர் மீது காதலில் விழுந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

எலியும் பூனையும் போல் இருந்த டொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜோங் உன் உறவு நாளுக்கு நாள் யாருமே எதிர்ப்பாராத அளவு வளர்ந்து வருகிறது. கிம் ஜோங் உன்னை ராக்கெட் மேன் என்றும், சின்ன பையன் என்றும் விமர்சித்த ட்ரம்ப், சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின் போது, அவரை புகழ்ந்து தள்ளினார். அந்த சந்திப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திப்பின் போது, அணு ஆயுதங்களை குறைக்க அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் எதையுமே வட கொரியா இதுவரை பின்பற்றவில்லை. 

ஆனால், மீண்டும் கிம் ஜோங் உன்னை சந்திக்க ட்ரம்ப் ஆசைப்படுவதாக சமீபத்தில் தெரிவித்தார். இதற்கிடையே, நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், கிம் ஜோங் உன் தனக்கு பல கடிதங்கள் எழுதியதாகவும், அதை படித்து தான் அவர் மீது காதலில் விழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். "அவர் எனக்கு அழகான கடிதங்கள் எழுதினார். அதன்பின் நாங்கள் காதலில் விழுந்தோம். அவை அழகான கடிதங்கள். நாங்கள் காதலில் விழுந்தோம்" என்றார் ட்ரம்ப். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close