இளம் வயதில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லியேன் கான்வே கூறி உள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், தான் இளம் வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறினார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். அப்போது பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புகையில் கெல்லியேன் கான்வே சிறு வயதில் தனக்கு நேர்ந்தவை குறித்து குறிப்பிட்டார்.
மேலும், இது போல பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வெளிப்படையாக பரிதாப்படும், இது போலான நிலையில் தானும் இருந்துள்ளதாகவும் கூறினார்.
51 வயதாகும் கான்வே, முன்னதாக தன்னை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
*Newstm .in