தகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ்புக் மீது ரூ.12,000 கோடி அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 05:39 am
facebook-to-be-fined-1-6-billion-dollars

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் மீது சுமார் ரூ.12,000 கோடி அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மோசடி விவகாரத்தின் போது,  சுமார் 5 கோடி பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 5 கோடி பேரின் 'ஆக்ஸஸ் டோக்கன்' எனப்படும் இணைய சாவி வசதியை, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஹேக்கர்கள் திருடியதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு மொபைல், அல்லது கம்பியூட்டரில், பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்டை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் வசதிக்கு பெயர் தான் ஆக்ஸஸ் டோக்கன்.

இதனால், மேலும் 4 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பிற்காக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த அரசு தகவல் பாதுகாப்பு நிறுவனம், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பேஸ்புக் மீது 1.6 பில்லியன் டாலர், அதாவது 11,900 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close