வரிகளை குறைக்கிறது இந்தியா: ட்ரம்ப் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 06:22 am
india-has-agreed-to-reduce-tariffs-trump

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்திய அரசு சுமத்தி வரும் கூடுதல் வரியை குறைக்க, பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது இந்திய அரசு கடும் வரிகளை பல ஆண்டுகளாக விதித்து வருகிறது. அதிபர் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், மற்ற நாடுகள் அமெரிக்காவை மோசமாக நடத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். சமீபத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதித்து பதிலடி நடவடிக்கையை தொடங்கினார். முக்கியமாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, இது வர்த்தகப் போராக மாறி, இரு நாடுகளும் மாறி மாறி, வரிகளை விதித்து வருகின்றன.  

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரிகளை தொடர்ந்து விமர்சித்து வந்த ட்ரம்ப், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாக தெரிவித்தார். பிரதமர் மோடியுடன் நல்ல உறவை கொண்டுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், "இந்தியா வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களாக என்னை தொடர்பு கொண்டு வரியை குறைக்க முன்வந்துள்ளார்கள். நாங்கள் கூப்பிடவே இல்லை. இது மிகவும் ஆச்சரியமான விஷயம்" என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close