இந்தியா மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 

  Padmapriya   | Last Modified : 04 Oct, 2018 01:59 pm
ahead-of-5-billion-india-russia-missile-deal-us-warns-of-sanctions

ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ஏவுகணைகளை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரஷ்ய அதிர் விளாடிமிர் புதின் இன்று இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அந்த நாட்டின் தயாரிப்பான எஸ் 400 என்ற ஏவுகணையை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டால் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கான செய்தித் தொடர்பாளர் ,'' ரஷ்யாவிடமிருந்து எஸ் ஏவுகணையை வாங்குவதென்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையில் இந்தியா மீது விதிக்க உள்ள பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று எச்சரிக்கை  விடுத்தார். மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்ற நடைமுறையே அமெரிக்கா பின்பற்றி வருகிறது என்பது வெளிப்படையான ஒன்றும் அந்நிலையில் ரஷ்யாவுடன் மேற்கொள்ள உள்ள ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் இந்தியாவுக்கு நல்லதாக இருக்கும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்திய அரசு ராணுவத் தேவைகளுக்காக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வருவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.  மேலும் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் சமீபத்தில் அமெரிக்காவில்  மேற்கொள்ளப்பட்டது. 

அதுமட்டுமின்றி இந்தத் தடையை நீக்கக்கூடிய அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே உள்ளது என்றும் இச்சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்கா தடை விதிக்கும் முடிவே மேற்கொண்டால், அதை விலக்குமாறு அதிபர்டொனால்டு டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்கவும் இந்தியா முடிவு  எடுத்துள்ளது. ஏனெனில் ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தை  மேற்கொள்வது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதனிடையே இன்று அதிகாரப்பூர்வ பயணமாக தலைநகர் டெல்லி வந்தடையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள உள்ள பேச்சு வார்த்தைக்கு பின்னர் இருநாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.39,000 கோடி மதிப்பிலான ஆயுதங்ள் மற்றும் ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close